நார்த் பிரிட்ஜ் சாலை குடியிருப்பில் தீ விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர்: நார்த் பிரிட்ஜ் சாலையில் நேற்று (ஜூன் 12) இரவு ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று இரவு 10.15 மணியளவில் பிளாக் 8இல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்!
அதாவது, குடியிருப்பு பிளாக்கின் ஏழாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF கூறியுள்ளது.
மேலும், தண்ணீர் பீச்சியடிக்கும் கருவி பயன்படுத்தி நீர் அணைக்கப்பட்டது எனவும் அது தெரிவித்துள்ளது.
பிளாக்கின் ஆறாவது மாடி முதல் 10 வது மாடி வரை சுமார் 120 பேரை பத்திரமாக காவல்துறையினர் வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டனர், ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் ION ஆர்ச்சர்ட் மால் 4 நாள்களுக்கு மூடப்படும்