சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்கு கப்பல் மோதியதில் நீரில் மூழ்கி தமிழக மீனவர்கள் உயிரிழப்பு!

இந்தியா: கர்நாடகா மாநிலத்தில் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் நடுக்கடலில் 14 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்குக் கப்பல் எதிர்பாராதவிதமாக அந்த மீனவர்கள் படகில் மோதியது.

அதனை அடுத்து, மீனவர்களின் படகு நீரில் மூழ்கியது. அதில் இருந்த தமிழக மீனவர்கள் 7 பேர், மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

அவர்களில் 2 பேர் கப்பல் ஊழியர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

மாயமான மற்ற 9 பேரை தேடும் பணி நடைபெற்றது. தற்போது, அவர்களில் தமிழகத்தின் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பழனிவேல் என்ற அந்த மீனவரின் உடலுக்கு நேற்று அவரின் சொந்த ஊரான கன்னிராஜபுரத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்றது.

Related Articles

Back to top button