சிங்கப்பூர் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி… இந்த மாதத்தில் மட்டும் 5 பேர் மரணம்

சிங்கப்பூரில் மேலும் இரண்டு வேலையிட இறப்புகள் இந்த ஆகஸ்டில் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

65 வயதுமிக்க ஊழியர்

கிராஞ்சி நீர் மீட்பு ஆலையில் நேற்று முன்தினம் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் விழுந்ததில் இதில் 65 வயதுமிக்க ஊழியர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

விபத்தை அடுத்து, கூ டெக் புவாட் மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட அந்த சிங்கப்பூர் ஊழியர் மருத்துவமனையில் பலியானார்.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு: வீட்டில் பணிபுரிய கிளாஸ் 3 உரிமம் கொண்ட டிரைவர்கள் தேவை – சம்பளம் S$3,500

32 வயதான வெளிநாட்டு ஊழியர்

மற்றொரு மரணம், 60 உட்லண்ட்ஸ் இண்டஸ்ட்ரியல் பார்க் டி ஸ்ட்ரீட் 2இல் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்டது.

அங்கு ஏற்பட்ட விபத்தில் 32 வயதான வங்காளதேச ஊழியர் ஒருவர் இறந்தார்.

செண்டா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், கட்டுமான தளத்தில் லாரி மூலம் கான்கிரீட் மின் கம்பத்தின் அடிப்பகுதியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அது அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் மரணித்தார் என கூறப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டு மட்டும் வேலையிட மரணங்களின் எண்ணிக்கையை 36 ஆக உயர்வு கண்டுள்ளது.

அதில் ஐந்து இந்த மாதத்தில் நிகழ்ந்தன என்று மனிதவள அமைச்சகம் (MOM) சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியர்… “கஷ்டப்பட்டு சம்பாதிச்சது போச்சு” – மனைவியிடம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்

Related Articles

Back to top button