சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை – தூக்கி எறிந்த சிகரெட்… சிக்கிய ஊழியர் – இந்த தப்பை செய்யாதீங்க!

சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் சிகரெட் துண்டை சாக்கடையில் எறிந்ததற்காக தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
ஆமாங்க, சிகரெட் துண்டை சாக்கடையில் எறிந்ததற்காக அவருக்கு $300 அபராதம் செலுத்துபடி அதிகாரி கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு சிங்கப்பூர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – மீறினால் அனுமதி ரத்து
ஆனால், அவர் அமலாக்க அதிகாரியிடம் லஞ்சமாக S$100 கொடுத்து தப்பிடலாம் என எண்ணி அதை கொடுக்க முயன்றதில் சிக்கி கொண்டார்.
41 வயதான வங்கதேச நாட்டவரான கான் முகமது ஆலமின் என்பவருக்கு நேற்று (ஜூலை 26) நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த குற்றம் கடந்த பிப்ரவரி 3 அன்று நடந்தது. ஊழல் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சட்டத்தை அறிந்துகொள்ளுங்கள்
சிங்கப்பூரில் இதுபோன்ற ஊழல் குற்றத்தில் சிக்கினால், S$100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
விமான உணவில் பாம்பு தலையா!! என்னங்க சொல்றிங்க… அலறும் விமான பயணிகள்!