சிங்கப்பூரில் 17 வெளிநாட்டு ஊழியர் பயணித்த லாரி விபத்து – ஒருவர் மரணம்!

Published On: April 20, 2021
foreign worker dead after accident along PIE

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 20) காலை பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் லாரியின் பின்புறத்தில் பயணித்த 17 வெளிநாட்டு ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜலான் பஹார் வெளியேறுவதற்கு முன்பு சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் லாரி மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் டிப்பர் டிரக் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காலை 6.06 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய 23 முதல் 46 வயதுக்குட்பட்ட 17 லாரி பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் மயக்க நிலையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 36 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment