ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… தூக்கி சென்று நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறையில் அடைப்பு

கெயிலாங்கில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாலியல் தொழிலாளியைக் கண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவர், அந்த பெண்ணை அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், மேலும் மானபங்கம் செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

40 வயது வங்காளதேச தொழிற்சாலை ஊழியர் பாட்டியன் சோஹாக் என்பவர், அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் இப்படி இருந்தா கண்டிப்பா சிறை தான்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து சிக்கிய ஊழியர்

பின்னர் அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார், மூன்று நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் ஊழியரை கைது செய்தனர்.

கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு, பாலுறவுக்காக பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறைத்தண்டனை, மூன்று முறை பிரம்படி விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார், குற்றவாளி தனது செயலுக்காக மிகவும் வருந்துவதாக கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி அதிகாலையில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஊழியர்; விமான நிலையத்திலேயே கைது – அவர் செய்தது என்ன?

Related Articles

Back to top button