சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரித் தள்ளுபடி அதிகரிப்பு

சிங்கப்பூரில் கட்டுமான, கப்பல் மற்றும் செயல்முறை துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு ஊழியர் பற்றாக்குறை மற்றும் அதிக செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் சலுகை வழங்கப்பட உள்ளது.
சுமார் 15,000 நிறுவனங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரித் தள்ளுபடி அதிகரிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒர்க் பாஸ் அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களை சிங்கப்பூர் ஏற்காது!
இந்த சலுகை மே முதல் டிசம்பர் வரை இருக்கும் என்றும் அதில் கூறப்படுகிறது.
அமைச்சகத்தின் தகவலின்படி, மேற்கண்ட துறைகளில் உள்ள ஒர்க் பெர்மிட் ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி மாதத்திற்கு S$90-இல் இருந்து S$250 வரை உயரும்.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 60,000 அல்லது 16 சதவீதம் ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அந்த துறைகளில் குறைந்துள்ளது.
ஊழியர்களுக்கு மே மாதத்தில் அதிகரித்த வரி தள்ளுபடி ஜூன் மாதத்தில் செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.