சிங்கப்பூரில் தன்னுடைய சம்பள பாக்கியை கேட்ட வெளிநாட்டு ஊழியருக்கு ஆயுதம் கொண்டு தாக்கு – முதலாளி வெறிச்செயல்

SINGAPORE : சம்பள பாக்கி தொடர்பாக தனது ஊழியருடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கட்டுமான நிறுவன முதலாளி ஒருவர் இரும்பு கம்பியால் வெளிநாட்டு ஊழியரின் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தினார்.

இதில், 67 வயதான ஹோ சியோவ் கை என்ற அந்த முதலாளிக்கு இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

39 வயதான வங்காளதேசத்தைச் சேர்ந்த திரு மியா ரசித்க்கு ஹோ தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 12 அன்று இந்த தாக்குதல் நடந்த போது திரு ரசித், ஹோ சியோவ் காய் கட்டுமான நிறுவனத்தில் பணியாளராக இருந்தார்.

தன்னுடைய சம்பள பாக்கியைக் தருமாறு திரு. ரசித் ஹோவிடம் கேட்டுள்ளார், மறுநாள் தருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

பின்னர் மறுநாள் கேட்கும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹோ அரை கிலோ எடைகொண்ட இரும்புக் கம்பி ஒன்றை கொண்டு திரு. ரசித்தை தாக்கியுள்ளார்.

பின்னர் போலீசார் வரும் முன்னர் அவர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button