வெளிநாட்டு ஊழியரின் சம்பளம் வெறும் S$1,200… கதறி அழுத ஊழியர்; நேர்மையுடன் உதவிய துப்புரவு பணியாளர்!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தொலைத்து அழுதுகொண்டு இருந்தார்.

அவரின் கண்ணீரை துடைக்கும் விதமாக நல்லுள்ளம் கொண்ட MRT நிலைய துப்புரவு பணியாளர் ஒருவர் அவருக்கு உதவினார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர்: மனைவிக்கு நண்பர் மூலம் சென்ற பொருட்கள்… கடைசியில் வாழ்க்கைக்கே வேட்டு வைத்த நண்பன் – சிறையில் கம்பி எண்ணும் துரோகம்

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஊழியர் தாஜூல் என்பவர் S$450 பணம் அடங்கிய தனது பர்ஸை தொலைத்து கண் கலங்கி நின்றார்.

ஊழியரின் பர்ஸை கண்டுபிடித்த துப்புரவு பணியாளர், அப்படியே சக ஊழியரான தாஜூலுக்குத் திருப்பிக் கொடுத்ததாக ஸ்டாம்ப் பகிர்ந்து கொண்டுள்ளது.

நடந்த சம்பவம்

ஜூலை 15 அன்று, தாஜுல் one-north MRT நிலைய எக்ஸிட் Bல் தனது மதிய உணவு இடைவேளையை எடுத்துக் கொண்டிருந்தார். 28 வயதான அவர் சிங்கப்பூரில் ஏழு வருடங்கள் ஓட்டுநராக பணியாற்றியவர்.

பின்னர் சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு சென்றுள்ளார் தாஜூல். அதன் பிறகு அவரின் பர்ஸ் தொலைந்ததை உணர்ந்தார்.

அவர் மாதம் வெறும் S$1,200 மட்டுமே சம்பாதிக்கிறார். பர்ஸ் தொலைந்ததை உணர்ந்த அவர் “நான் அதிகமாக அழுதேன்,” என்று சோகத்துடன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் செம்ம வேலை: சும்மா நடிச்சா போதும், S$1,500 சம்பளம் – உடனே Apply செய்ங்க!!!

அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கி அட்டையைத் தவிர, பர்ஸில் S$450 ரொக்கம் இருந்தது.

அவர் தொலைத்த பர்ஸில் தாஜூலின் கைபேசி எண் இல்லை, ஆனால் அதில் அவருக்கு வேலை செய்யும் நிறுவனத்தின் பெயருடன் work permit இருந்தது.

பர்ஸை எடுத்த துப்புரவு பணியாளர் பிறகு அவரின் முதலாளியை அழைத்தார், முதலாளி தாஜூலுக்கு தகவல் தெரிவித்தார்.

தனது பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த தாஜுல், மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார். துப்புரவு பணியாளர் மாமாவுக்காக தாம் பிராத்தனை செய்வதாகவும் கூறினார்.

Related Articles

Back to top button