சிங்கப்பூரில் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனை – Work pass இல்லாத வெளிநாட்டு ஊழியர் உட்பட ஐவர் கைது

Work pass இல்லாமல் வேலை செய்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக ஐந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு வயது 20 முதல் 33 வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது பொழுதுபோக்கு நிலையங்களில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் சிக்கியதாக குறிப்பிடப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி 7 அறையில் இடிந்து விழுந்த மேல்தளம் – 100 பேர் வெளியேற்றம்; பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன ?

Work pass வேலை அனுமதி இல்லாமல் வேலை செய்த 25 வயது வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் 1990ன் கீழ் கைது செய்யப்பட்டார்.

ரகசிய குழு, போதைப்பொருள் நடவடிக்கை, பயங்கர ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது நடவடிக்கை நடந்தது.

அதிகாரிகள் 134 பேரிடம் சோதனை நடத்தினர். அதில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு விவரங்கள் கூறுகின்றது.

Related Articles

Back to top button