பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?

சிங்கப்பூரில் பெண்ணை பாலியல் ரீதியாக சீரழித்ததாக சந்தேகிக்கப்படும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் நேற்று (மார்ச் 10) காணொளி இணைப்பின் வழியாக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அவர்கள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 30 வயதான அகமது ரய்ஹான் மற்றும் 36 வயதான ஆலம் ஃபய்சல் என்ற தகவலை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!

முன்பின் அறியாதவர்கள்

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் வழங்கப்பட்ட செய்தியில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த இருவரையும் முன்னர் தெரியாது என கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண்ணை அவர்கள் இருவரும் பயனியர் ரோட்டில் கொண்டு வந்து தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கு ஒத்திவைப்பு

அவர்கள் தற்போது மத்திய காவல் பிரிவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை வரும் மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றம் நிரூபணம் ஆனால், அவர்கள் இருவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

நடந்தது என்ன?

கடந்த செவ்வாய் அன்று காலை 7.25 மணிக்கு, பயனியர் சாலையில் 32 வயதுமிக்க பெண் ஒருவர் காயத்துடன் சுயநினைவாக காணப்பட்டதாக காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.

அங்கு கிடந்த பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் பல காயங்கள் ஏற்பட்டு இருந்ததாகவும், அதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் காயங்கள் அடைப்படையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பெண் பாலியல் சீரழிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தது.

பின்னர், இருவரின் அடையாளத்தை கண்டறிந்து அவர்களை 12 மணி நேரத்திற்குள் கைது செய்தது காவல்துறை.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா விமான சேவை; திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களும் சேர்ப்பு!

Related Articles

Back to top button