பெரும் இக்கட்டான தொற்று சூழலில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கிறிஸ்தவ அமைப்புகள்!

சிங்கப்பூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் COVID-19 பரவலின் போது வெளிநாட்டு ஊழியர்களுக்கு தாமாக முன்வந்து சேவை செய்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

முதன் முதலில் சிங்கப்பூரில் ஜனவரி 2020ல் தொற்று கண்டறியப்பட்டபோது வெளிநாட்டு ஊழியர்களிடையே அதிக அளவில் பரவும் என யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தளர்த்தப்பட உள்ள தற்போதைய கட்டுப்பாடுகள்..!

ஏப்ரல் 2020ல் பாதிப்பிற்குள்ளாகிய வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு 10,000மாக உயர்ந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் அவர் தங்கும் விடுதிகளிலையே தனிமைப் படுத்திவைக்கபட்டனர்.

ஏற்கனவே சவாலான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஊழியர்களுக்கு ஊரடங்கு மேலும் சவாலாக அமைந்தது. அந்த சமயத்தில் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வருமானம் இல்லாமல் உணவுக்கு கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இதனை அறிந்து கொண்ட சிங்கப்பூரில் வாழும் கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். இதற்கு உந்துதலாக இருந்தது பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள வசனமே ஆகும். (நீங்கள் வெளிநாட்டவரை நேசித்து உணவு உடை வழங்கி உபசரிக்க வேண்டும், ஏனெனில் எகிப்தில் நீங்களும் வெளிநாட்டவர்தான்).

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் ஐந்தில் ஒரு பங்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Related Articles

Back to top button