வெளிநாட்டு ஊழியர்களின் வருகை கட்டுப்பாடு: கட்டுமானத் துறை மட்டும் அல்லாது வேறு சில துறைகளும் பாதிப்பு

வெளிநாட்டு ஊழியர்களின் வருகை கட்டுப்பாட்டால் கட்டுமானத் துறை மட்டும் அல்லாது வேறு சில துறைகளும் சரிவை சந்தித்துள்ளன.
அதில் குறிப்பாக வேலைகள் தாமதமாக நடப்பதாக கருதப்படுவது, குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றும் பணி ஆகும்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 158 பேர் மீது விசாரணை
தெம்பனீஸ் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், வீசப்பட்ட குப்பை பைகளில் சித்தியுள்ள உணவை மைனாக்கள் உண்பதும் மக்கள் நடமாட்டத்தை பார்த்ததும் அவை பறந்து செல்வதுமாய் காட்சிகள் பதிவாகி உள்ளது.
அங்கு குடியிருக்கும் மக்கள் இது போன்ற பிரச்சனைகளை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங்கின், கடந்த மே 28 முகநூலில் பதிவிட்டதன் மூலமே இது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக குடியிருப்பு வாசிகள் கூறினர்.
திரு பே அவர்கள் அந்த பதிவில் கூறியிருந்ததாவது; பாதி சதவீதத்திற்கு மேற்ப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தட்டுப்பாட்டால் மீதம் இருக்கும் ஊழியர்களை வைத்தே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மக்கள் வீட்டுலையே இருப்பதால் அதிகமான குப்பைகள் கொட்டப்படுவதாகவும், பொது இடங்களை சுத்தம் செய்வதால் இவற்றை குறிப்பிட்ட நேரங்களில் ஊழியர்களால் அகற்ற முடியவில்லை என கூறியிருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது; பணியாளர்களை விட பணிகள் அதிகம் உள்ளதால் மக்களும் குப்பைகளை சிந்தாமல் பொறுப்புடன் செயல் பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தெம்பனீஸ் வடக்கு பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளில் சிலர் தாமாக முன்வந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்கிறார்கள் என்பது பாராட்டிற்கு உரியது.
தற்சமயம் நிலவிவரும் சூழ்நிலை ஒப்பந்தக்காரர்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹ்வா தெரிவித்தார்.
மரைன் பரேட் டவுன் கவுன்சிலின் தலைவரான திரு லிம் பயோ சுவான், திரு பே எழுப்பிய அதே காரணங்களுக்காக அங்குள்ள துப்புறவாளர்கள் பணி நீடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பணியாளர்கள் பற்றாக்குறை, பொருட்கள் ஏற்றுமதியில் தாமதம் போன்ற சிக்கல்களால் வேலைகள் தாமதமாகுவதாகவும், அதனை மக்கள் புரிந்து கொண்டும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உருமாறிய கொரோனா வகைகளுக்கு Pfizer, Moderna மருந்துகள் சிறந்ததா? – சிங்கப்பூர் நிபுணர் குழு விளக்கம்