வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி செய்யப்படும்!

வெளிநாட்டு பணிப்பெண்கள் உட்பட அனைத்து எஸ் பாஸ் மற்றும் ஒர்க் பெர்மிட் உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி செய்யப்படும் என மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தள்ளுபடி, ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தனிமைப்படுத்தப்படும் காலங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செய்யப்படும்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகளுக்கு அதிகரித்த செலவினங்களை சமாளிக்கும் வகையில் அது முதலாளிகளுக்கு உதவியாக அமையும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக நாட்டிற்குள்ளே வரும் எஸ் பாஸ் மற்றும் ஒர்க் பெர்மிட் உடைய வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
மேலும், அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது.
ஊழியர்களின் தனிமை காலத்தின்போது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு ஊழியர் தீர்வையை ஏற்கனவே முதலாளிகள் செலுத்தி இருப்பின், அது ஜூன் மாதம் ஈடுசெய்ய பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.