சிங்கப்பூரில் உயர லிஃப்டில் வேலை செய்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள்; திடீரெனெ அறுந்த கேபிள் – கதறிய ஊழியர்கள்

மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்!

உயர வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் லிஃப்டில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோது அதன் கேபிள்கள் ஒரு முனையில் அறுந்தது.

நேற்று மார்ச் 23 காலை 9:30 மணியளவில் பிளாக் 708 பாசிர் ரிஸ் டிரைவ் 10 இல் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்ததாக சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் Work permit உடைய ஊழியர்களுக்கு என்ன தளர்வுகள்? – நுழைவு அனுமதி தேவையா?

அந்த நேரத்தில் லிஃப்டில், இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பறவைகள் கூடு கட்டுவதைத் தடுக்க வலைகளை நிறுவிக்கொண்டிருந்தனர்.

தடுப்பு வலை அமைப்பதற்கான நேற்று முன்தினம் கடந்த மார்ச் 22ம் தேதி உயர வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் லிஃப்ட் பொருத்தப்பட்டது.

இந்நிலையில், லிப்ட் தரையில் இருந்து ஏழு பிளாட்டுக்கு மேலே இருந்தபோது அதன் வலது பக்கத்தில் உள்ள கேபிள்கள் தளர தொடங்கியது.

Breaking | சிங்கப்பூரில் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிகள் தளர்வு – Detailed Report

இதனால் அந்த லிப்ட் அமைப்பு செங்குத்து நிலைக்கு கீழ் சாய்ந்தது, அதன் ஒரு விளிம்பு ஆறாவது பிளாட்டுக்கு சென்றது.

பலத்த சத்தம் கேட்டு, ஏழாவது மாடியில் வசிக்கும் 65 வயதான ஆடவர் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அதில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் சிக்கி தவித்து கதறிக்கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

ஒன்றும் அறியாமல் திகைத்துப்போன வெளிநாட்டு ஊழியர்கள் சிறிது நேரத்தில், சாமர்த்தியமாக யோசித்து அருகிலுள்ள படிக்கட்டுகளை நோக்கி ஏறி, பின்னர் பாதுகாப்பாக தப்பிக்க முடிந்தது என்று குடியிருப்பாளர் கூறினார்.

இதில் அவர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஊழியர்கள் இருவரும் கண்காணிப்பிற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

JUSTIN: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஏப்ரல் 1 முதல் ஈஸியா சிங்கப்பூருக்குள் வரலாம் – செம்ம அறிவிப்பு!

Related Articles

Back to top button