வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பை வழங்குமா லாரி பயணம்? – நிறுவனங்கள் புலம்புவது ஏன்?

கட்டாய அம்சங்கள்!!

சிங்கப்பூரில் லாரிகளில் அழைத்து செல்லப்படும் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த நிதியுதவி தேவை என்று கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக சேனல் நியூஸ் ஆசியா கூறியுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியிடங்களுக்கு சென்றுவர பயன்படுத்தப்படும் லாரிகளில் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் கட்டாய அம்சங்கள் குறித்து வட்டார அமைச்சரான எமி கோர் முன்னதாக கூறினார்.

சிங்கப்பூரில் Work permit மற்றும் S Pass ஊழியர்களுக்கு இது கட்டாயம்: இந்த ஆண்டுக்குள் நடப்புக்கு வரும் – தெரிந்துகொள்ளுங்கள்!

அதாவது லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அவசியம் என்றும், மழைக் காலங்களில் ஊழியர்களை பாதுகாக்க முழு மேற்கூரை அமைப்புகள் கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த புதிய கட்டாய அறிவிப்பை நடைமுறையில் கொண்டுவர நிதியுதவி தேவை என்று நிறுவனங்கள் கூறுகின்றன.

தொற்றுநோயின் தாக்கம் காரணமாக கட்டுமானத் துறை கடுமையாக பாதித்து, நிலையை மேம்படுத்த போராடி வருவதாக கூறப்படுகிறது.

லிட்டில் இந்தியாவில் 18 ஆண்டுகளாக இந்திய ஊழியர்களின் நன்மதிப்பை பெற்ற கோமளாஸ் உணவகம் மூடல்!

அதே போல, வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையும் நீடித்து வருகிறது.

இதனை சரி செய்ய ஆகும் செலவும் ஏராளம் என்று நிறுவனங்கள் புலம்பி தள்ளுகின்றன.

இந்த நிலையில் கட்டாய அம்சங்களை மேம்படுத்த நிதி அவசியம் என்று கூறுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொறுத்து இருந்து பாப்போம் இதனை நிறுவனங்கள் எப்படி நடைமுறைப்படுத்துகின்றன என்று…

பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?

Related Articles

Back to top button