சிங்கப்பூருக்கு திரும்பும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறையலாம்!

சிங்கப்பூருக்கு திரும்பும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சிறிய அளவில் இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் சிங்கப்பூர் திரும்புவதற்கு அதிக காலம் ஆகலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்பு இருந்த இக்கட்டான நிலைகளுடன் ஒப்பிடும்போது, அவர்கள் சிங்கப்பூருக்கு திரும்பும் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டுக்கான ஊழியர் சந்தை அறிக்கை கடந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து பொருளாதார வல்லுநர்கள் இதனை தெரிவித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதிகமான வேலை இழப்புகள் வெளிநாட்டு ஊழியர்களையே சார்ந்திருந்தாக மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.