வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் நிறுவனங்கள் இனி இதை செய்வது கட்டாயம்!
பட்ஜெட் உரை!

வெளிநாட்டு ஊழியர்களை தங்கள் நிறுவங்களில் வேலைக்கு எடுத்தால், உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தகுதி வரம்பாக மாதத்திற்கு S$1,400 சம்பளம் கொடுக்க வேண்டும். இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இந்த நடைமுறை படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தெரிந்துகொள்ள வேண்டியது – சிறந்த மாற்றம்!
இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் 2022 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் அதிகாரபூர்வமாக வெளியானது.
உள்ளூர் ஊழியர் அணியை வலுவாக்க இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, உள்ளூர் ஊழியர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவது நாம் அறிந்தது தான். அதில் இதுவும் ஒரு நடைமுறை.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியான ஊதிய உயர்வு (PWM) முறையானது சில்லறை விற்பனை, உணவு மற்றும் கழிவு மேலாண்மை துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கூடுதலாக, இந்த சம்பள உயர்வு துப்புரவு பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ள ஓட்டுநர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singaporeவுடன் இணைந்து இருங்கள்..!
வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பை வழங்குமா லாரி பயணம்? – நிறுவனங்கள் புலம்புவது ஏன்?