“சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவன் நீ”…”நான் சிங்கப்பூரர்” என்று வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூரருக்கு இடையே நடந்த சண்டை (Video)
"2 பேர் மீதும் தவறு"

சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டு ஊழியர் மற்றும் ஒரு சிங்கப்பூரர் இடையே ரயிலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் வடக்கு-கிழக்கு பாதை MRT ரயிலில் நடந்துள்ளது. இதன் வீடியோவை Stomp நிருபர் அதன் ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார்.
#JUSTIN: கட்டுமானம், கடல் துறைகளில் உள்ள Work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM முக்கிய அறிவிப்பு!
“நீ இங்க வேலைக்கு வந்திருக்க… நீ போ” என்று வெளிநாட்டு ஊழியரை நோக்கி ஏசும்போது தொடங்குகிறது அந்த வீடியோ.
மேலும், “என்னிடம் சத்தம் போட… நீ யாரு?” என்றும் ஊழியரை நோக்கி சிங்கப்பூரர் ஒருவர் கடுமையாக ஏசுகிறார்.
அதற்கு வெளிநாட்டு ஊழியர் “போ,போ,போ” என்று அவரிடம் திரும்பத் திரும்ப கூறுகிறார், மேலும் “நீங்கள் யார்?” என திருப்பி கேட்கிறார்.
“நான் சிங்கப்பூரர்” என பதிலளித்த அந்த ஆடவரை, “F*** you” என்று ஊழியர் கூறியதும் வாக்குவாதம் பெரும் அளவில் ஏற்பட்டது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைக்காக அவர்கள் இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக Stomp கூறியுள்ளது.
நிருபர் கூறியதாவது, “யார் சரியானவர் என தெரியவில்லை. 2 பேர் மீதும் தவறு உள்ளது.”
“ஆனால் பொதுப் போக்குவரத்தில் இப்படி தேவையில்லாமல் சண்டையிடுவது தேவையில்லாத வேலை என நான் நினைக்கிறேன்” என்றார் நிருபர்.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!
Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg