முகக்கவசம் அணிய மறுத்த வெளிநாட்டவருக்கு ஆறு மாத சிறை – பாஸ்போர்ட் பறிமுதல்

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிய மறுத்த பிரிட்டிஷ் ஆடவர் ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் இல்லாமல் அவர் பயணித்ததை சக பயணி ஒருவர் படம்பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பெண்மணி ஒருவர் இறந்ததற்கு தடுப்பூசி காரணம் இல்லை – சுகாதார அமைச்சகம்
சில மணிநேரங்களுக்குப் பிறகு, பெஞ்சமின் க்ளின் என்ற அந்த ஆடவரை, சிங்கப்பூர் காவல்துறை கைது செய்தது.
பொது இடத்தில் தொல்லை செய்த குற்றத்திற்காக காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, முகக்கவசம் தேவை அற்றது என்றும், COVID-19 -லிருந்து மக்களைப் பாதுகாக்கத் அது தவறிவிட்டதாகவும் க்ளின் கருதியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் கைது