பண ஆதாயத்திற்காக போலி சிம் அட்டைகளை பதிவு செய்த சந்தேகத்தின்பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீவு முழுவதும் கடந்த ஜூலை 17 முதல் ஜூலை 25 வரை அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
போலி சிம் அட்டை
அப்போது விசாரிக்கப்பட்ட 44 பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போலி சிம் கார்டுகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பதிவு செய்யும் சந்தாதாரர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அவர்களில் 16 முதல் 48 வயதுக்குட்பட்ட 21 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவர் என்றும் அது கூறியது.
அதே நேரத்தில், 16 முதல் 57 வயதுக்குட்பட்ட மேலும் ஒன்பது ஆண்களும் நான்கு பெண்களும் இந்த விசாரணைகளுக்கு உதவி வருவதாக காவல்துறை தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையில், சிம் கார்டு ஒன்றுக்கு $10 முதல் $15 வரை ஆதாயம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபரும் தங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 31 முதல் 49 சிம் கார்டுகளை மோசடி கும்பலிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
புகார் அளிக்க…
மோசடியான சிம் கார்டுகளைப் பதிவு செய்பவர்கள் குறித்து புகார் அளிக்க 1800-255-0000 என்ற காவல்துறை ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம்.
மேலும், அது குறித்து www.police.gov.sg/i-witness என்ற இணையதளத்திலும் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.
வழங்கும் தகவல்கள் அனைத்து கண்டிப்பாக ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறை உறுதி அளித்துள்ளது.
சட்டம்
மோசடியாகப் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டை மற்றொரு நபருக்கு வழங்கினால், S$10,000 வரை அபராதம் மற்றும்/அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.