சிங்கப்பூரில் எரிவாயு வெடிப்பில் சிக்கிய வெளிநாட்டு தொழிலாளி – தீ காயங்களுக்கு ஆளான அவலம்

சிங்கப்பூரில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் சிக்கிய வெளிநாட்டு தொழிலாளி பெண் ஒருவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த தொழிலாளி சிங்கையில் சுமார் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் (ஆகஸ்ட் 1) அப்பர் பாயா லெபார் சாலையில் உள்ள ஒரு நிலத்தில் எரிவாயு வெடித்ததாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் 30 வயதான மியான்மார் நாட்டை சேர்ந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு காலில் சிராய்ப்பு மற்றும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
விசாரணைகள் தொடர்கின்றன.