ஹௌகங்கில் இறந்து சடலமாக கிடந்த ஊழியர் – என்ன நடந்தது?

Published On: July 14, 2022

ஹௌகங்கில் உள்ள Florida condominium வீட்டில் 26 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (ஜூலை 13) நடந்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்

புதன்கிழமை காலை 6.53 மணியளவில் 76 ஹௌகாங் அவென்யூ 7இல் இருந்து புகார் அழைப்பு வந்ததாக போலீஸ் கூறியுள்ளது.

பிளாக்கின் இரண்டாம் மட்டத்தில் அந்த நபர் அசையாமல் கிடந்துள்ளார் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் சதியாட்டம் எதையும் சந்தேகிக்கவில்லை.

இந்தியர் விபத்தில் பலி – பரிதவிக்கும் குடும்பம்; சிங்கப்பூரில் மரணம் புரியாத புதிர்