சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் கைது

COVID-19 தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட இந்தோனேசிய ஆடவர் ஒருவர், சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 14 அன்று சாங்கிக்கு அப்பால் உள்ள நீரில் நீந்தி வந்ததைக் கண்டறிந்த கடலோரக் காவல்படையினர் சட்டவிரோத நுழைவுக்காக அவரை கைது செய்தனர். மொத்தம் கைது செய்யப்பட்ட 5 பேரில் இவரும் ஒருவர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வாரங்களுக்கு சம்பள ஆதரவு!
சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை பதிவான 7 பாதிப்புகளில் இவர் ஒருவர்.
நேற்றைய (ஜூன் 19) அறிக்கையில், ஜூன் 14 அன்று இரவு 9.25 மணியளவில், ஏவியேஷன் பார்க் சாலையில் கடலில் நீந்திவந்த ஐந்து பேரை கடலோர காவல்படை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநுழைவு சட்டத்தின்கீழ், சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த, 24 முதல் 31 வயதுக்குட்பட்ட ஆடவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதிக்கப்பட்ட ஐந்து ஆடவர்களின், 26 வயது ஆடவருக்கு கடந்த ஜூன் 16ஆம் தேதி COVID-19 தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.
பின்னர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மற்ற நான்கு பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் வருகை அட்டை விண்ணப்ப சேவை குறித்த பொது ஆலோசனை – ICA