இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர சுமார் 1,126 பயணிகளுக்கு அனுமதி

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர சுமார் 1,126 பயணிகளுக்கு VTL கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திங்கட்கிழமை 23.59 மணி நிலவரப்படி, இந்தோனேசியாவிலிருந்து 2,681 பயணிகள் VTL இன் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2,068 பேர் குறுகிய கால வருகையாளர்கள்.

சிங்கப்பூர் வருகை அனுமதிக்கான விண்ணப்பங்கள் கடந்த திங்களன்று தொடங்கியது.

மேலும், வரும் நவம்பர் 29 அன்று பயணிகள் சிங்கப்பூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button