இந்தியாவுக்கு சிங்கப்பூர் செய்த பேருதவி.. நன்றி கூறிய இந்தியா!

இந்தியாவின் COVID-19 வைரஸின் இரண்டாவது அலை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடினமான காலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் பிற உபகரணங்களை வழங்கிய சிங்கப்பூருக்கு நன்றியை அவர் கூறியுள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானது என்று எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல இந்தியாவிற்கு உதவி தேவை இருப்பின் சிங்கப்பூரை நாடலாம் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் உறுதி கூறினார்.
இந்தியாவின் COVID-19 தொற்றின் இரண்டாவது அலை பல்வேறு பகுதிகளை புரட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் அதற்கான உதவி மற்றும் ஆதரவுகளை இந்தியாவுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றன.