7வது சர்வதேச யோகா தினத்தை அனுசரித்த சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம்!

சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம், நேற்று 7வது சர்வதேச யோகா தினத்தை அனுசரித்தது.
கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஆன்லைன் மூலம் கடந்த ஒரு வார காலம் நடத்தப்பட்ட 190 யோகா அமர்வுகள் வெற்றிகரமாக முடிந்தது.
இதையும் படிங்க : வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் தொடர்பாக தவறான தகவல்களை அளித்தவருக்கு சிறை
இதில் யோகா தினத்தை சிறப்பிக்கும் வண்ணம், ‘[email protected]’ என்ற சிறப்பு காணொளி ஒன்றும் தூதரகத்தின் பேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள், கடந்த ஜூன் 14 அன்று சிங்கப்பூரில் தொடங்கியது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களின் யோகா ஆசானா காணொளிகளும் திங்களன்று அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டன.
இந்த பயிற்றுவிப்பு அமர்வுகளில், 56 யோகா பயிற்றுநர்கள், ஸ்டுடியோக்கள், அமைப்புகள் மற்றும் சமூக நிலையங்கள் பங்கேற்றதாக தூதரக உயர் அதிகாரி பி.குமரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில், ஐந்து நாட்களுக்குள் மூன்று ஊழியர்கள் தனித்தனி விபத்துக்களில் மரணம்!