சிங்கப்பூரில் கட்டுமான வேலையின்போது இந்திய ஊழியர் கீழே விழுந்து மரணம்

பூன் லேயில் இந்திய ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அங்குள்ள கட்டுமான தள கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்து ஊழியர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
22 Chin Bee Roadஇல் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
35 வயதான இந்தியர், சக்சஸ் இன்ஜினியரிங் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்றும் அதில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் 4வது மாடியில், பூம் லிப்ட் என்னும் பாரந்தூக்கி மேடையில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்தார் என்றும் கூறியுள்ளது அது.
அவர் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதை அடுத்து, சிகிச்சை பலனின்றி காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.