வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் தொடர்பாக தவறான தகவல்களை அளித்தவருக்கு சிறை

பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வீட்டிலேயே தனது COVID-19 வீட்டில் தங்கும் உத்தரவை (SHN) நிறைவேற்ற தவறான தகவல்களை அளித்த ஆடவர் ஒருவருக்கு மூன்று வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

58 வயதான விஜயகுமார் இசட் ஜோசப் என்ற அந்த ஆடவர், கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில், ஐந்து நாட்களுக்குள் மூன்று ஊழியர்கள் தனித்தனி விபத்துக்களில் மரணம்!

அவர் எங்கிருந்து பயணம் செய்தார் என்பது பற்றி இரண்டு முறை தவறான தகவல்களை அளித்ததாக நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது.

தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ், முதல் குற்றத்திற்காக, விஜயகுமார் ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக 35வது மரணம்

Related Articles

Back to top button