ஜலான் சுல்தானில் பீச் ரோடு சந்திப்பில் தீப்பிடித்து எரிந்த கார்

ஜலான் சுல்தானில் பீச் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் (மார்ச் 20) கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
அன்று இரவு 7.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படைக்கு (SCDF) வாகன தீ விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தில் பார்வையாளர்கள் ஒன்றுகூடி இருப்பதை காணொளி வாயிலாக காண முடிகிறது.
காரில் தீ அதிகமாவதற்கு முன்பு, பெண் ஒருவரும், ஆணும் காரை விட்டு உடமைகளுடன் வெளியேறினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.