சிங்கப்பூரில் குப்பை அகற்றும் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்; S$2,800 சம்பளம்…”வேலைக்கு உண்மையாக இருக்கிறேன்” என பெருமிதம்!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலானோர் குப்பைகளை அகற்றும் வேலையை உண்மையில் தேர்வு செய்ய மாட்டார்கள்.
ஆனால், மலேசியாவைச் சேர்ந்த ஊழியர் சிங்கப்பூரில் அந்த வேலையை தேர்வு செய்து, குப்பைகளை அகற்றும் ஊழியராக வளம் வருகிறார்.
அதுவும் நியாமான சம்பளத்தில் சிறந்த வேலையை செய்வதாக அந்த ஊழியர் குறிப்பிடுகிறார்.
தனது சம்பளம் அதிகமானதாகவும், அவர் RM6,000 (S$1,900) முதல் RM9,600 (S$2,800) வரை சம்பாதிப்பதாகவும் மலேசிய ஊடகமான Sin Chew Daily செய்தி வெளியிட்டுள்ளது.
வெறும் 20 வயதே ஆகும் அவர், ஜோஹூரில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி பேருந்தில் பயணம் செய்து வருகிறார்.
சிங்கப்பூரில் அவர் நினைத்தது போல் வாழ்க்கை சிறப்பாக இல்லை என்றாலும், நிலையான இந்த வேலைக்காக அவர் நன்றியுள்ளவராய் இருப்பதாக விளக்கினார்.
அவர் “படிக்கவில்லை” என்பது குறிப்பிடத்தக்க விடயம். வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வேலையை விரும்பி செய்யும்போது எல்லாமே சாத்தியம் தான்.