சிங்கப்பூரில் வேலை பெற வேண்டி தில்லாலங்கடி செயலில் ஈடுபட்ட ஊழியர்; “இரக்கமே கிடையாது…சிறை தான்” – MOM கறார்

சிங்கப்பூரில் போலியான தகுதி சான்றிதழை கொடுத்து வேலை வாங்க முயற்ச்சி செய்த 31 வயது ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீ பாதுகாப்பு மேலாளராக சிங்கப்பூரில் வேலைக்கு சேர அந்த ஊழியர் விரும்பியுள்ளார், அதற்கு சரியான தகுதிகளைப் பெறுவதற்கு இரண்டு வருடங்கள் பயிற்சி வேண்டும்.
ஆனால், அதற்கு பதிலாக அவர் போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர அவர் முயன்றது அம்பலமானது. இந்நிலையில், முஹம்மது ரசூல் காதர் அலி என்ற 31 வயதான சிங்கப்பூரர்க்கு 3 வாரச் சிறைத்தண்டனை புதன்கிழமை (அக் 5) விதிக்கப்பட்டுள்ளது.
அவர் போலி பாலிடெக்னிக் டிப்ளோமாவை முதலாளியிடம் கொடுத்து வேலை வாங்க முயற்சித்துள்ளார் என்பது கூடுதல் செய்தி.
போலி ஆவணத்தை உண்மையான ஒன்றாகப் பயன்படுத்தியதற்காகவும், மனித வள மேலாளரை ஏமாற்ற முயன்ற மற்றொரு குற்றத்திற்காகவும் அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.