கெப்பல் கப்பல் கட்டும் தளத்தில் கடும் விபத்து: கடலில் சரிந்து விழுந்த கட்டமைப்பு…1 வெளிநாட்டு ஊழியரை காணவில்லை – 4 ஊழியருக்கு காயம்

Keppel Shipyard collapsed: கெப்பல் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) காலை 10:40 மணியளவில் பெரிய கட்டமைப்பு கடலில் சரிந்து விழுந்ததில் நான்கு ஊழியர்கள் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஒருவரை காணவில்லை.

இன்று காலை 9:45 மணி நிலவரப்படி, கடலில் காணாமல் போன ஊழியரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்; வீடியோ கால் விபரீதம்… உயிரை மாய்துகொண்ட மனைவி

51 Pioneer Sector 1ல் அமைந்துள்ள கெப்பல் கப்பல் கட்டும் தளத்தில் (Keppel Shipyard) ஏற்பட்ட பணியிட விபத்தை மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

கடலில் விழுந்து மூழ்கிய இரண்டு ஊழியர்கள்:

இந்த சம்பவத்தால் இரண்டு ஊழியர்கள் கடலில் விழுந்து மூழ்கியதாக கெப்பல் ஷிப்யார்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒருவரை மீட்டதாகவும், அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு ஊழியரை தற்போது வரை காணவில்லை.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறை கடலோரக் காவல்படையுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக Keppel Shipyard தெரிவித்துள்ளது.

காணாமல் போன ஊழியரை தேடும் பணி தீவிரம்:

கப்பலில் இருந்து கடலில் விழுந்து காணாமல் போன 38 வயதான பங்களாதேஷ் ஊழியரை இன்னும் காணவில்லை என்றும் MOM கூறியது. தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.

அவர் Kumarann Marine பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மற்ற நான்கு ஊழியர்கள்

இருவர் பங்களாதேஷ் நாட்டவர்கள், ஒருவர் சீன நாட்டவர் மற்றும் மற்றொருவர் சிங்கப்பூரர்.

இவர்கள் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர், மேலும் இவர்கள் நன்றாக இருப்பதாகவும் MOM கூறியுள்ளது.

விபத்துக்கான காரணத்தை MOM ஆராய்ந்து வருகிறது.

மேலும் கப்பலில் நடந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Credit: Mothership 

சிங்கப்பூரில் காணாமல் போன நபர் – ஆற்றில் சடலமாக மிதந்தார்: செய்தி அறிந்து கதறும் குடும்பம்

Related Articles

Back to top button