சிங்கப்பூரில் கெப்பல் கப்பல்தளத்தில் விபத்து: கடலில் விழுந்த வெளிநாட்டு ஊழியர் என்ன ஆனார்?? – மற்ற 4 பேரின் நிலை?

Keppel Shipyard collapsed: சிங்கப்பூரில் கெப்பல் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) ஊழியர்கள் விபத்துக்குள்ளானார்கள்.
அதில் கடலில் விழுந்த வெளிநாட்டு ஊழியரை தேடும் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்; வீடியோ கால் விபரீதம்… உயிரை மாய்துகொண்ட மனைவி
அன்று காலை 10:40 மணியளவில் கெப்பல் கப்பல் கட்டும் தளத்தில் ஊழியர்கள் வேலை செய்துகொண்டு இருந்த போது பெரிய கட்டமைப்பு கடலில் சரிந்து விழுந்தது.
அதில் நான்கு ஊழியர்கள் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியரை காணவில்லை என குறிப்பிடப்பட்டது.
நேற்று காலை 9:45 மணி நிலவரப்படி வரை, கடலில் காணாமல் போன ஊழியரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.
ஆனால், தற்போதைய அறிவிப்பில் நேற்றே தேடும் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டதாக SCDF சொல்லியுள்ளது.