லிட்டில் இந்தியாவில் 18 ஆண்டுகளாக இந்திய ஊழியர்களின் நன்மதிப்பை பெற்ற கோமளாஸ் உணவகம் மூடல்!

ஊழியர்களின் பற்றாக்குறை!

சிங்கப்பூரில் சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கோமளாஸ் உணவக கிளை மூடப்பட உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிட்டில் இந்தியாவின் Farrer பார்க் பகுதியில் செராங்கூன் சாலையில் இயங்கி வந்த கோமளாஸ் உணவகம் சமையல் ஊழியர்களின் பற்றாக்குறையால் நாளை மார்ச் 14 முதல் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு – மகிழ்ச்சி செய்தி கூறிய சிங்கப்பூர்!

ஒரு உணவகத்தில் அடித்தளமே சமையல் கைதேர்ந்த ஊழியர்கள் தான், கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் இருந்தும் கூட சமையல்காரர்கள் இல்லாத காரணத்தால் உணவகம் மூடப்படுவதாக அதன் உரிமையாளர் 63 வயதான தனசேகர் கூறினார்.

இந்திய ஊழியர்கள் அதிகம் விரும்பி செல்லும் உணவகங்களில் மிக முக்கியமானது இந்த கோமளாஸ் உணவகம்.

பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?

சுமார் 12 கிளைகள் இயங்கி வந்த நிலையில் உணவகத்தில் சமையல் ஊழியர் பற்றாக்குறை காரணமாக தற்போது 4 உணவகங்கள் மட்டுமே செயல்பட்டது. தற்போது மேலும் ஒரு கிளை மூட உள்ளதாக அவர் கூறினார்.

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம் சிறப்பாக செய்யப்பட்டது, பின்னர் 2004 ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால் தொடர் சரிவுகள் ஏற்பட்டன.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள நம்முடன் இணைந்து இருங்கள்..!

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!

Related Articles

Back to top button