லிட்டில் இந்தியாவில் தினமும் பூனை, எலி விளையாட்டு… “கோட் வேர்ட்”வுடன் சட்ட விரோத செயல் – அதிர்ச்சி தகவல்!

சட்டவிரோத மெல்லும் புகையிலை விற்பனை!

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தினமும் பூனை, எலி விளையாட்டு நடப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கவலையற்றவர்களாகவும், எந்த பாதிப்பும் இல்லாமல் நடமாடும் சாதாரண மனிதர்களை போன்று திரியும் சிலர் உண்மையில் மெல்லும் புகையிலையை விற்கும் கள்ள வியாபாரிகள் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தோலுரித்து காட்டியுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்து வந்த தமிழக ஊழியர்: “மனைவி கொடுத்த புகார்” – ஊழியரை தூக்கிய போலீசார்!

லிட்டில் இந்தியாவில் உள்ள பரபரப்பான சாலைகள், தெருக்கள் மற்றும் சந்துகளில் சாதாரணமாக நடந்து செல்லும் அவர்கள் புகையிலை கள்ள வியாபாரம் தொடர்புடைய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக உள்ளனர்.

புகையிலைக்கு தடை

சிங்கப்பூரில் கடந்த 2016ம் ஆண்டில் மெல்லும் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டது, இருப்பினும் இந்த வியாபாரம் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

இது பற்றிய தகவல்களை சந்தர், டெஸ்கர் சாலைகளில் கடைவைத்துள்ள சில கடைக்காரர்கள் கூறியுள்ளதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 3 வாரங்களாக லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத மெல்லும் புகையிலை விற்பனையை குறித்த ஆராச்சியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கொண்டது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் ஊழியர் அதிரடி கைது – இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்!

Code word

அவர்களுக்கு என்று ஒரு Code word ஒன்று வைத்துக்கொள்ளும் கள்ள வியாபாரிகள், அவர்கள் பக்கம் யாராவது நடமாடினால் வாயினால் முணுமுணுத்து அதனை வியாபாரம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அதிகாரிகள் வந்தால் அவர்களுக்குள் உள்ளே நெட்ஒர்க் மூலம் தகவல் பரிமாற்றம் உடனுக்கு உடன் நடைபெறுவதாகவும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் தமிழக ஊழியரின் நிலை என்ன ஆனது? தமிழக முதல்வருக்கு சென்ற கோரிக்கை – கண்ணீரில் குடும்பம்.!

மெல்லும் புகையிலையை இறக்குமதி அல்லது விற்பனை செய்தால் தண்டனை

இதற்கு S$10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

புகையிலையை வாங்கும் குற்றத்திற்காக அதிகபட்சமாக S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள் – Telegram: https://t.me/tamildailysg

Related Articles

Back to top button