சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்

ஓல்ட் ஜூரோங் சாலையில் நேற்று (ஆகஸ்ட் 4) லாரி விபத்தில் சிக்கிய 17 மற்றும் 23 வயதுடைய இருவர் உயிரிழந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
இதில் 25 வயதான ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நடந்த பிறகு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.
முன் இருக்கையில் சிக்கியிருந்த இரு பயணிகளைக் காப்பாற்ற ஹைட்ராலிக் கருவிகளைப் பயன்படுத்தியதாக SCDF கூறியது.
இதில் 17 மற்றும் 23 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஓட்டுனர் மற்றும் 15 முதல் 20 வயதுக்குட்பட்ட மீதமுள்ள ஐந்து பயணிகள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
Video: https://www.facebook.com/SgRoadsaccidentcom/videos/395929782642816