அப்பர் புக்கிட் தீமா சாலையில் லாரி விபத்தில் சிக்கியது – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

அப்பர் புக்கிட் தீமா சாலையில் லாரி ஒன்று விபத்தில் சிக்கியது, இதில் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
லாரி ஓட்டுநர் மற்றும் 9 பயணிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 24) காலை 7.20 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.