வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்து – தீவிர சிகிச்சை பிரிவில் இருவர்

பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) லாரிக்கும், வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிக்கும் இடையே நேற்று ஏற்பட்ட விபத்தில் 33 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், டிப்பர் லாரிக்கு பின்னால் அமர்ந்திருந்த 17 வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
நேற்று இரவு பேஸ்புக் பதிவில், Migrant Workers’ Centre விபத்தில் காயமடைந்த ஆண்களின் நிலை குறித்த புதுப்பிப்பை வழங்கியது, அவர்கள் அனைவரும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நேற்று இரவு நிலவரப்படி, காயமடைந்த 9 ஊழியர்கள் சிறிய காயங்களுக்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பினர்.
மேலும், 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICA) உள்ளனர்.
அவர்களுக்கு உதவி வழங்க முதலாளியுடன் இணைந்து செயல்படுவதாகவும் Migrant Workers’ Centre தெரிவித்துள்ளது.