சிங்கப்பூரில் பேருந்தில் சிக்கி உயிரிழந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர்

பாசிர் ரிஸ் டிரைவ் 1இல் டி-சந்திப்புக்கு அருகிலுள்ள லோயாங் அவென்யூவில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கடந்த மார்ச் 19 அன்று பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.
அந்த சைக்கிள் ஓட்டுநர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் (31 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் தொழில் மற்றும் அடையாளம் குறித்த விவரங்களை ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்ட்டுள்ளது.
அவர் விமான தொழில்நுட்ப வல்லுநராக சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்று கூறியுள்ளது.
இறந்தவரின் மனைவி S. மேரி என்பவர், தனது கணவர் உயிரிழந்த பிறகு, சனிக்கிழமை அதிகாலை முதல் பேஸ்புக்கில் தொடர் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
சைக்கிள் ஓட்டுநர் சுமார் 30 மீட்டர் பேருந்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.