பெண்ணிடம் மர்ம உறுப்பை எடுத்து காட்டிய நபர்; வீடியோ வைத்து கைது செய்தது சிங்கப்பூர் போலீஸ்

குல் வே சர்க்கிள் பகுதியில் பெண்ணிடம் தனது பிறப்புறுப்பை காட்டியதாக 36 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ஜூலை 27ஆம் தேதி புகார் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் விசாரணைகளின் மூலம், ஜூரோங் காவல் துறை அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து கைது செய்தனர்.
அவர் மீது நேற்று (செப். 15) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது, இதற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சமூகத்தில் மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.