சிங்கப்பூரில் ஆயுதத்தை கொண்டு 4 பேரைத் தாக்கிய ஆடவர் கைது

புக்கிட் மேரா பிளாட்டில் இன்று (ஜூன் 6) நான்கு பேரை ஆயுதம் ஏந்தி தாக்கிய சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதியில் ரோந்து செல்லும் அதிகாரிகள் காலை 6 மணியளவில் பிளாக் 2 ஜலான் புக்கிட் மேரா சாலையின் கீழ் தளத்தில், 59 வயதான பெண் ஒருவர் ரத்தக் கரைகளுடன் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 300 பேரிடம் காவல்துறை விசாரணை!

நான்கு பேர் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​48 வயதான சிங்கப்பூரரான அந்த சந்தேகநபர் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு பிளாட்டுக்குள் நுழைந்து, இரண்டு பெண்களை கத்தியால் தாக்கியது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆபத்தான ஆயுதம் கொண்டு கடுமையான காயத்தை ஏற்படுத்தியது, ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தாக்குதல் நடத்தியவர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட அதிக தொகை கொண்ட பணப்பை – உரிமையாளரிடம் ஒப்படைக்க போராடிய பெண்!

Related Articles

Back to top button