சிங்கப்பூரில் 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்!

சிங்கப்பூரில் கடந்த ஜூன் 10 அன்று, கிடங்கின் கட்டிடம் ஒன்றில் ஆடவர் ஒருவர் 40 மீட்டர் உயரத்தில் இருந்து வீழ்ந்து இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதன் உயரம் ஒரு குடியிருப்பு பிளாக்கின் 14 மாடிகளுக்கு சமம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் ION ஆர்ச்சர்ட் மால் 4 நாள்களுக்கு மூடப்படும்
25 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் அந்த இடத்தில் படிக்கட்டு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார், மேலும் படிக்கட்டு சுவர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியைக் கடக்கும்போது கீழே விழுந்து இறந்ததாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
அன்று மாலை 5.30 மணியளவில், 20 துவாஸ் சவுத் அவென்யூ 14இல் நடந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாக காவல்துறை, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையின் துணை மருத்துவர்கள் வந்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆனால், இதில் எந்தவிதமான சதிச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பெரும் இக்கட்டான தொற்று சூழலில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கிறிஸ்தவ அமைப்புகள்!