சகோதரியை கொலை செய்ததாக சகோதரர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில், முன்னர் தனது சகோதரிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர், இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ததாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

29 வயதான ஹுவாங் போகேன் என்ற அந்த ஆடவர், 19 வயதான ஹுவாங் பாயிங் என்ற சகோதரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், 41 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி சீ மீ வான் மற்றும் 62 வயதான லிம் பெங் தியோங் ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

கடந்த மே 4ஆம் தேதி, கிளெமென்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 1, பிளாக் 602ல் ஆறாவது மாடி பிளாட்டில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Articles

Back to top button