யிஷுன் பிளாக்கில் வசிப்பவர்களுக்கு கட்டாய COVID-19 சோதனைகள் முடிந்தது – 3 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில், பிளாக் 745 யிஷுன் ஸ்ட்ரீட் 72இல் வசிப்பவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டாய சோதனைக்கு பிறகு, மூன்று பேருக்கு COVID-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 509 குடியிருப்பாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு கட்டாய PCR சோதனை முடித்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கனரக வாகனம், சைக்கிள் மோதி விபத்து – சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்
நேற்று இரவு 10 மணி நிலவரப்படி, 506 நபர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சோதனை நடவடிக்கைகள் குறித்த புதுப்பிப்பில் MOH கூறியுள்ளது.
இரண்டு வெவ்வேறு வீடுகளில் ஆறு பேருக்கு COVID-19 பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னர் கட்டாய சோதனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பாசிட்டிவ் நபர்கள் குறித்த விவரங்கள் வரவிருக்கும் செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஊழியர்களுக்கு SafeEntry நுழைவை உறுதிசெய்ய தவறிய 26 நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு