சிங்கப்பூரில் 20 மசாஜ் பார்லர்களை தற்காலிகமாக மூட உத்தரவு

சிங்கப்பூரில், சுமார் இருபது மசாஜ் பார்லர்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு கூறப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.
அந்த இடங்களில், உடற்பிடிப்பாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவில்லை என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – 3 பேருக்கு தொடர்பு கண்டறியப்படவில்லை
மேலும், விதிகளை மீறிய நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முறையே S$1,000 மற்றும் S$300 அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகளின் அமலாக்க சோதனைகளின்போது, COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதை கண்டறிந்தனர் என SPF செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
மசாஜ் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மசாஜ் நடவடிக்கை உட்பட எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என SPF வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஆங் மோ கியோ குடியிருப்பில் தீ: 130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் – 7 பேர் மருத்துவமனையில் அனுமதி