சிங்கப்பூரில் நவீன வசதியுடன் உருவாகும் இரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை கட்டி, அதனை இயக்க கார்ப்பரேட் நிறுவனத்தை மனிதவள அமைச்சகம் (MOM) அமைத்துள்ளது.
தங்கு விடுதிகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்காகவும், தங்கும் விடுதி நிர்வாகத்தில் திறன்களைக் கட்டியெழுப்புவதற்காகவும் அவற்றை நிர்வகிக்க இம்முயற்சியை மேற்கொள்வதாக MOM தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ஊழியர் திருச்சியில் கைது – பாஸ்போர்ட் சோதனையில் குற்றம் அம்பலம்
துக்காங் இன்னோவேஷன் லேன் (Tukang Innovation Lane) மற்றும் செங்காங் வெஸ்ட் (Sengkang West) ஆகிய இடங்களில் இரண்டு புதிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை நேரடியாக இயக்க, Nest Singapore Limited என்ற கார்ப்பரேட் நிறுவனத்தை மனிதவள அமைச்சகம் (MOM) அமைத்துள்ளது.
செங்காங் வெஸ்ட் மற்றும் பூன் லேயில் உள்ள துக்காங் இன்னோவேஷன் லேனில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் முறையே 2,400 மற்றும் 7,200 படுக்கைகள் அமைய உள்ளன. இவைகள் முறையே 2025 மற்றும் 2028ல் செயல்படும்.
“Nest, தொழிலாளர்களின் விடுதி கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் முன்முயற்சிகளை சிறப்பாக வடிவமைக்க MOMக்கு உதவும்” எனவும் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரில் வேலையின்போது 9வது மாடி உயரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஊழியர் – பதைபதைக்கும் வீடியோ
மற்ற அம்சங்கள்
-
- அறைகளில் மேம்படுத்தப்பட்ட காற்றோட்டத்திற்கான உயர் மேற்கூரை அமைப்புகள்
- எதிர்காலத்தில் நோய் பரவல் ஏற்பட்டால் அப்போது மருத்துவம் செய்யும் இடங்களாக மாற்றம் செய்யக்கூடிய வகையில் சிறப்பு இடவமைப்பு
- திறந்த வெற்றிடத் தளப் பகுதி, அது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள கூடிய வகையில் இருக்கும்
- பல்நோக்கு அறைகள் மற்றும் உட்புற உடற்பயிற்சி கூடம்
- மினிமார்ட், கேண்டீன், முடிதிருத்தும் அறை, ATM பகுதி மற்றும் வெளிப்புறத்தில் புத்துணர்வு பெறுவதற்கான இடம் போன்ற வணிக வசதிகள்
- இரண்டு கிரிக்கெட் பயிற்சி இடங்கள்
- ஒவ்வொரு தளத்திலும் பொதுவான இடங்கள் அமைக்கப்படும்
சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு சிறை: கழிவறையில் எட்டிப்பார்த்த ஊழியர் – அலறியடித்த பெண் புகார்