கோவிட் தொற்று சந்தேகம் உள்ள இந்திய ஊழியர் சொந்த நாட்டுக்கு செல்ல சாங்கி விமான நிலையத்தில் சுற்றியதாக குற்றச்சாட்டு

COVID-19 தொற்று சந்தேகிக்கப்பட்ட 26 வயதான இந்திய ஊழியர் சொந்த நாட்டுக்கு செல்ல சாங்கி விமான நிலைய பகுதியில் சுற்றித் திரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்திய நாட்டை சேர்ந்த பார்த்திபன் பாலச்சந்திரன், இது தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் – தமிழ்நாடு இடையே பயண திட்டம் உள்ளவர்களுக்கு இனிமையான செய்தி!
பார்திபன், ஜூராங் பென்ஜுரு தங்கும் விடுதியில் வசித்து வந்துள்ளார், கடந்த ஆண்டு COVID-19 சந்தேகம் காரணமாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, சோதனை முடிவுகள் வரும் வரை வெளியே செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் டாக்ஸி மூலம் சாங்கி விமான நிலையம் சென்றுள்ளார்.
அங்கு முனையம் 1க்கு சென்று, விமான நிலைய ஊழியர்களிடம் பேசினார் என்றும், மேலும் இந்தியாவுக்கு டிக்கெட் வாங்க முயன்றார் என்றும் கூறப்படுகின்றன.
மேலும் 4 மணி நேரம் விமான நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர், காவல்த்துறையினர் பார்த்திபனை கண்டறிந்து மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் அல்லாமல் பேருந்துகளில் கொண்டுசெல்வதில் உள்ள சிக்கல்கள்