சிங்கப்பூரில் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிகள் தளர்வு – Detailed Report

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் என்ன?

பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு ஊழியர் வெளியேறும் அனுமதிகளுக்கு (Exit pass) விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மேலும் சமூக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட சமீபத்திய கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தங்குமிடங்களில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும்.

JUSTIN: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஏப்ரல் 1 முதல் ஈஸியா சிங்கப்பூருக்குள் வரலாம் – செம்ம அறிவிப்பு!

அந்த கட்டுப்பாடுகள் தளர்வில் அடுத்த செவ்வாய் (மார்ச் 29) முதல் குழு அளவு வரம்புகள் ஐந்தில் இருந்து 10 பேர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது விருப்ப தேர்வாக இருக்கும்.

ஏப்ரல் முதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மட்டுமே பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அதற்கு முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் சமூகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கடந்த வாரம், சமூகத்திற்குச் செல்ல தடுப்பூசி செலுத்திக்கொண்டு வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை வார நாட்களில் 15,000 ஆகவும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 30,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.

மேற்கண்ட அந்த எண்ணிக்கை ஒதுக்கீடுகள் அப்படியே இருக்கும், ஆனால் இனி செல்வதற்கு முன் எடுக்கப்படும் ART சோதனை இருக்காது.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் எதிர்கொண்ட வறுமை; கடை உடைத்து திருட்டு….சிறை தண்டனை விதிப்பு!

 

Related Articles

Back to top button