வெளிநாட்டு ஊழியர்கள் 56 பேரிடம் சுமார் S$400,000 லஞ்சம்: சிங்கப்பூரில் சிக்கிய மேலாளர்; உடைந்தையாக சில ஊழியர்கள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து லஞ்சம் பெற்று அவர்களை வேலைக்கு எடுத்த சிங்கப்பூர் நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டு மேலாளர் ஒருவர் சிக்கியுள்ளார்.
கன்சர்வேன்சி நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டு மேலாளரான அவர், வேலைக்கான நிபந்தனையாக அல்லது work pass அனுமதிகளைப் புதுப்பித்ததற்காக வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து கிக்பேக் என்னும் லஞ்சப்பணம் வசூலித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் செயல்பாட்டு மேலாளர் மீது இன்று வியாழக்கிழமை (செப். 29) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
400,000 சிங்கப்பூர் டாலர் லஞ்சப்பணம்
லியான் செங் காண்டிராக்டிங்கில் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹோ சியாக் ஹாக் டெரிக் என்ற செயல்பாட்டு மேலாளர் 2014 முதல் பல சந்தர்ப்பங்களில் லஞ்சங்களை பெற்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அவர், 56 வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 400,000 சிங்கப்பூர் டாலர்களைக் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
வெளிநாட்டு ஊழியர்கள் உடந்தை
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.
லஞ்ச பணம் ஹோவினால் நேரடியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது, அல்லது ஹோவின் அறிவுறுத்தலின்படி செயல்படும் மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மூலமும் பணம் வசூலிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று ஊழியர்களும் தங்கள் Work pass அனுமதியை புதுப்பிப்பதற்காக அவருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்திய ஊழியரை காணவில்லை – ஷேர் செய்து கண்டுபிடிக்க உதவுங்க வாசகர்களே
61 குற்றச்சாட்டு
53 வயதான ஹோ, வெளிநாட்டு மனித ஆற்றல் சட்டத்தின் (EFMA) கீழ் 61 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அவருக்கு S$30,000க்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலையின்போது பலியான ஊழியர்: “இனிமே பொறுக்க முடியாது”…கலத்தில் இறங்கிய மனிதவள அமைச்சகம்